சுரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் !

இதில் வைட்டமின் சி, பி மற்றும் கே, இரும்பு, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இதில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள நிலையில், மிகக் குறைந்தளவிலான கலோரிகள் மட்டுமே உள்ளதால், ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கோடையில் அடிக்கடி ரத்த அழுத்தம் குறைவது வாடிக்கையான ஒன்றாகும். சுரைக்காய் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுவதால், தாராளமாக உணவில் சேர்க்கலாம்.

இது ஒரு இயற்கையான ஹைட்ரேட்டர் ஆகும். இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், கோடையின் வெப்பமான நாட்களிலும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.

இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிறு தொடர்பான பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.

சுரைக்காயிலுள்ள கோலின் என்ற பண்புகள், மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. கவலை மற்றும் மன அழுத்தத்தை தடுக்கிறது.

இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கிறது; இது இதய நோய் அபாயத்தை குறைப்பதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துகிறது. கோடை நோய் தாக்கத்தையும் தவிர்க்கிறது.