கூந்தல் உதிர்வை தடுக்க ஆயுர்வேதம் தரும் தீர்வுகள்!

இளம் வயதிலேயே மெலிதல், கூந்தல் உதிர்வு, இளநரை போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.

ஆயுர்வேதத்தில், கூந்தலின் ஆரோக்கியம், தாதுக்கள், ஊட்டச்சத்து ஆகிய பலவற்றுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. வாதம் அதிகரிப்பதால், வறட்சி, உடைதல், உதிர்வு ஏற்படலாம்.

பித்தம் அதிகரிப்பதால், இளநரை, வேர்கால் பலவீனம், கபம் அதிகமாவதால், உச்சந்தலையில் அதிக எண்ணெய் சுரப்பு, பொடுகு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

ஆயுர்வேத மூலிகைகள்... கூந்தலை பராமரிக்க நெல்லிக்காய், பிருங்கராஜ், பிரம்மி, செம்பருத்தி எண்ணெய் ஆகியவை பயன்படுகிறது.

உச்சந்தலை சுத்தம், பொடுகு பராமரிப்பில், வேம்பு முக்கியமாக உள்ளது. வெட்டிவேர், கரிசாலை, கறிவேப்பிலை போன்ற மூலிகைகளும் கூந்தல் பராமரிப்பில் இடம் பெறுகின்றன.

உதிர்வின் காரணத்துக்கேற்ப, உள் மருந்துகள், எண்ணெய் சிகிச்சைகள், தலைக்கான மூலிகைத் தயாரிப்புகள், உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும்.

கூந்தல் உதிர்வு, தொடர்ந்து பல மாதங்கள் நீடிப்பது, தலையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் உதிர்வது, உச்சந்தலையில் அரிப்பு, சிவப்பு புண்கள் போன்றவை இருந்தால் டாக்டரை அணுகவும்.

கூந்தல் உதிர்வுக்கு ஒரு எண்ணெய், ஒரு மூலிகை மட்டும் தீர்வாக இருக்காது.

காரணத்தைக் கண்டறிந்து உணவு, வாழ்க்கை முறை மாற்றம், உச்சந்தலை பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை என்ற ஒருங்கிணைந்த அணுகு முறையையே ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.