தண்ணீர் பாட்டிலில் பாக்டீரியாவா? பராமரித்தால் பயமில்லை...

பாக்டீரியாக்கள் அனைத்துமே நமக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. நமது வாயில் கூட பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன.

அதேசமயம் தண்ணீர் பாட்டில்களில் நிறைந்திருக்கும் பாக்டீரியாக்கள் பொதுவாக நமது வாயில் உள்ள பாக்டீரியாக்களை ஒத்ததாக இருக்கும்

மேலும் தண்ணீர் பாட்டில்களில் இருக்கும் பாக்டீரியாக்களால் உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக அதிக அளவிலான தரவுகள் இல்லை, என்பதால் நாம் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை.

ஆனால் இரண்டு நாட்கள் பாட்டில்களில் தண்ணீர் சேகரித்து வைத்தால், அதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். அவற்றை போக்கினாலே, கிருமியும் போய்விடும்.

பிளாஸ்டிக் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது டிஷ் வாஷ் நீர்மத்தை விட்டு, நன்கு குலுக்கி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

அழுக்குகள் நிறைந்த பாட்டிலில் சிறிது வினிகர், பேக்கிங் சோடாவை போட்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 30-45 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் துர்நாற்றமும் போகும்.

ஸ்டீல் பாட்டில்களை குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சூடான சோப்பு நீரை பயன்படுத்தி கழுவ வேண்டும்.

மேலும் வாரத்திற்கு ஒருமுறையாவது பாட்டில்களில் நன்றாக கழுவி சூரிய ஒளியில் நன்கு காயவைத்து எடுக்கலாம்.