பளபளப்பான சருமம், கூந்தலுக்கு வாழைப்பழம் போதுமே... குஷ்பூ சொல்லும் டிப்ஸ் !

சமீபத்தில் நடிகை குஷ்பூ கூந்தல், சருமப் பராமரிப்பு குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில், தன் அழகின் ரகசியம் குறித்த முக்கிய டிப்ஸை பகிர்ந்துள்ளார்.

ஞாயிறு என்றால் பேக் டே. வீட்டு வைத்திய முறைகள் சிறப்பானது.

வாழைப்பழம் உங்களின் கூந்தலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

வாழைப்பழ ஃபேஸ் பேக் உங்களின் சருமத்துக்கு முன்னெப்போதும் இல்லாத பொலிவை அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூந்தல் மற்றும் முகத்துக்கு வாழைப்பழ பேக் செய்துள்ள புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.