அழகிய குருசடை தீவு.. மிஸ் பண்ணிடாதீங்க !

அழகிய தெளிவான நீர், பவளப்பாறைகள், அரிய வகை கடல் உயிரினங்கள், படகு சவாரி என ராமேஸ்வரத்தின் குருசடை தீவு ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்றது.

ராமேஸ்வரத்திற்கு உள்ளே ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம் போல இந்த இடம் தனித்துவமான அழகுடன் ஜொலிக்கிறது.

பாம்பன் முதல் தூத்துக்குடி வரை மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இதில் அனைத்து தீவுகளுக்கும் ஒரு மணிமகுடம் போல குருசடைதீவு காட்சியளிக்கிறது.

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து 7 கி.மீ., தூரத்தில் இந்த அழகிய தீவு, சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகி வருகிறது.

இந்த தீவுக்கு படகில் பயணிக்கும்போது கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறை, கடல் குதிரை, துள்ளிக் குதிக்கும் டால்பின்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.

தீவில் உள்ள அழகிய இயற்கை காட்சிகள் மற்றும் வலசை வரும் பறவைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.

குருசடை தீவிற்கான படகு சவாரி தினமும் காலை 7 முதல் மதியம் 2 மணி வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தீவை அடைந்தவுடன் அழகிய கடற்கரை, பவளப்பாறைகள், கடல் வாழ் உயிரினங்களை கண்டு மகிழலாம். மேலும், விவேகானந்தர் நினைவிடம், கடல் விளக்க மையத்தையும் பார்வையிடலாம்.