நார் தேய்த்துக் குளித்தால் இத்தனை நன்மைகளா!!

சோப்புகள் இல்லாத காலத்தில் பீர்க்கங்காய், தேங்காய் நார் கொண்டு தான் உடல் முழுவதும் தேய்த்து குளிக்கும் பழக்கம் முன்னர் அதிகம் இருந்தது.

குளிக்கும் போது நார் கொண்டு தேய்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், வெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

குளிக்கும்போது சோப்புடன் நார் கொண்டு சருமத்தில் தேய்க்கும் போது உடலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.

மேலும் சருமத் துளைகள் நீங்கி புதிய செல்கள் உருவாகி உடல் பொலிவு பெறுவதுடன் சருமம் ஆரோக்கியமாகும்.

அது மட்டுமில்லாமல் நார் பயன்படுத்தி தேய்த்து குளிப்பதால், இயற்கையாகவே சருமம் மென்மைத் தன்மை அடையும்.

நார் கொண்டு தேய்த்துக் குளிப்பதால் மாசினால் உடலில் ஓட்டி கொண்டு இருக்கும் கிருமிகள் சருமத்திலிருந்து நீக்க முடியும்.

உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதால் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தின் ஓட்டம் அதிகரிக்கும்.

செல்லுலைட் எனப்படும் கொழுப்பு கட்டிகள் நார் கொண்டு அழுத்திக் குளிப்பதால் நன்கு கரைந்துவிடும்.