ப்ளூபக்கிங்...ஹேக்கர்களிடம் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி?
ப்ளூடூத் ஹேக்கிங் அல்லது ப்ளூபக்கிங் என்பது ஓர் ஹேக்கிங் செயல்முறை. ப்ளூ பக்கிங் மூலம் ஹேக்கர்ஸ் மற்றவர்கள் ப்ளூடூத் இணைப்பைக் கொண்டு சாதனங்களை ஹேக் செய்கிறார்கள்.
ஹேக்கர்கள் பாதிக்கப்பட்டவரின் போன் மற்றும் லேப்டாப் மூலம் அவர்களது சாதனங்களை இணைத்து முக்கியமான தகவல்களைத் திருடுகின்றனர்.
10 மீ., தூரத்தில் ப்ளூடூத் பயனர்கள் இருக்கும்போது, எளிதாக ஹேக் செய்ய முடியும். ப்ரூட் போர்ஸ் என்ற இணைப்பைப் பயன்படுத்தி உங்களது கோட், பாஸ்வேர்ட் அனைத்தையும் ஹேக்கர்ஸ் தகர்க்கின்றனர்.
ப்ளூடூத் இணைந்தவுடன் மால்வேர் சாப்ட்வேரை நிறுவி சம்பந்தப்பட்ட பயனர்களின் தகவல்களை திருடுகிறார்கள். இதில் போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், கான்டாக்ட் போன்ற அனைத்தும் அடங்கியுள்ளன.
சில நேரங்களில் வங்கிக் கணக்கு விவரங்களைக்கூட எடுத்து விடுகின்றனர். எனவே, உங்களை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி எனப் பார்க்கலாம்.
வயர்லஸ் சாதனங்களைப் பயன்படுத்தவில்லை என்றால் ப்ளூ டூத்தை ஆஃப் செய்து வைப்பது அவசியம். பிற சாதனங்களுக்கு ப்ளூடூத் விசிபிள் ஆவதை செட்டிங்ஸ் மூலம் தடுக்கலாம்.
உங்களது கேட்ஜெட்டுகளை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். ஒருபோதும் அறிமுகமில்லாத நபரின் ப்ளூடூத் பேரிங் ரெக்வொஸ்ட்களை ஏற்க வேண்டாம்.
தவிர்க்க முடியாத நேரங்களில் பொது வைஃபை பயன்படுத்த வேண்டி வந்தால், பயன்பாட்டுக்கு பின்னர் போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
ப்ளூடூத்துக்கு பயனர்கள் தங்கள் பெயரை வைப்பதைத் தவிர்க்கலாம். இதனால் உங்கள் விவரங்கள் பிறருக்கு எளிதில் தெரிந்து விட வாய்ப்புள்ளது.
அவ்வப்போது உங்கள் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ள ப்ளூடூத் டிவைஸ் குறித்து சோதனையிடலாம்.