யாதும் ஊரே யாவரும் கேளிர்... இன்று சர்வதேச தாய்மொழி தினம் !

உலகளவில் 6,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும், அதில் 43 சதவீதம் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.

குறிப்பிட்ட சில 100 மொழிகள் மட்டுமே கல்வி முறைகளிலும், பொது இடங்களிலும் உண்மையான இடத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, இன்றைய டிஜிட்டல் உலகில் 100க்கும் குறைவான மொழிகளே பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, மொழி, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழித்தன்மையை மேம்படுத்துவதற்காக, தாய்மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பிப்., 21 சர்வதேச தாய்மொழி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, சர்வதேச தாய் மொழி தினத்துக்கு, 'பன்மொழிக் கல்வி மற்றும் கல்வியை மாற்றியமைக்க வேண்டிய அவசியம்' என்ற தலைப்பில் 'தீம்' நிர்ணயிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

'மேலும், உலகளவில் 40 சதவீத மக்கள் தாங்கள் பேசக்கூடிய அல்லது புரிந்து கொள்ளும் மொழியில் போதிய கல்வியறிவு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிகளை வாழ வைப்பதில் வகுப்பறைகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது' என, யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது.