இன்று உலக பல்லிகள் தினம்!
உலகில் 7000 வகை பல்லி இனங்கள் உள்ளன. இவை சில செ.மீ., நீளம் முதல் 10 அடி நீளம் வரை உள்ளது.
சில பல்லி இனங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளன. இந்த நாள் அவற்றைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது
பல்லிகள் மட்டும் சுவரில் கீழே விழாமல் ஊர்ந்து செல்வதுண்டு. இதற்கென சிறப்பு ரோமங்கள் அதனிடம் உள்ளது.
பல்லியின் பாதம், விரல்களில் செதில்கள் போன்ற சிறிய ரோமங்கள் உள்ளன.
இவை சுவரிலோ, மற்ற பரப்பிலோ உள்ள கண்களுக்குத் தெரியாத மேடு, பள்ளங்களைப் பிடித்துக்கொண்டு கீழே விழாமல் பல்லியைக் காக்கின்றன.
இதனால் பல்லி மேற்கூரையிலும் சுவரிலும் எளிதாக நடந்து செல்கிறது.
பூமியில் பூச்சியினங்கள் பெருகாமல் சமநிலையில் வைத்திருக்க பல்லிகள் உதவுகின்றன.