பழையன கழிதலும்...புதியன புகுதலும்!! இன்று போகிப்பண்டிகை கொண்டாட்டம்!
போகிப்பண்டிகை இன்று (ஜனவரி:13) உலக தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளில் இப் பண்டிகை வருகிறது.
பொங்கலை வரவேற்கும் விதமாக வீடுகளுக்கு வெள்ளையடித்து, பயன்படுத்தாத பொருட்களைத் தீயிட்டு எரிக்கும் போது, அதனுடன், திருஷ்டியும் எரிந்து புதிய வாழ்க்கை ஆரம்பமாகும் என்பது நம்பிக்கை.
இந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அழித்து புதிய பொருட்களுக்கு இடம் கொடுப்பதும் முக்கியமான விஷயமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
எனவே இந்நாளில் பழைய பொருட்களை நீக்கி விட்டு வீட்டினை சுத்தம் செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருவார்கள்.
வீட்டில் பழைய பொருட்களை நீக்கி அழிப்பது போல் நம் மனதிலும் தீய எண்ணங்களை அழிக்க வேண்டும் என்பது இப்பண்டிகையின் முக்கிய தத்துவமாகும்.
அதேபோல் ஆரோக்கியம் தொடர்பாக போகிப்பண்டிகை அன்று ஒவ்வொரு வீ்ட்டின் நிலைக்கதவுக்கு மேல் காப்பு கட்டுவார்கள்.
ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து காப்பு கட்டி வீட்டினுள் தீய சக்தி நுழையாதவாறு நிலைக்கதவுக்கு மேல் காப்பு கட்டுவார்கள்.