வெயிலால் தரம் மாறும் பாட்டில் குடிநீர்: கடைகளில் வாங்கும் போது உஷார்

தினமும் மணிக்கணக்கில் குடிநீர் பாட்டில்கள் வெயிலில் இருக்கும் போது அவற்றின் பிளாஸ்டிக், ரசாயனத் தன்மை குடிநீரில் இறங்குவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே அவற்றை வெயிலில் வைக்கக்கூடாது என உணவுப்பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பாட்டில்களில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டாலோ வெயிலில் இருந்தாலோ வாட்ஸ் ஆப் எண்ணில் (94440 42322) நுகர்வோர் புகார் செய்யலாம்.

அதேபோல 20 லிட்டர் குடிநீர் கேன்களை தயாரிப்பு யூனிட்டில் இருந்து திறந்தவேனில் பகல் நேரத்தில் கொண்டு செல்லக்கூடாது. அல்லது தார்ப்பாயால் மூடிச்செல்ல வேண்டும்.

கடைகளுக்கோ வீடுகளுக்கோ திறந்தவேனில் கொண்டு வந்தாலும் புகார் செய்யலாம்.

20 லிட்டர் கேன்களை அதிகபட்சம் 30 முறை மட்டுமே கழுவி பயன்படுத்த உணவுப்பாதுகாப்புத்துறை அனுமதித்துள்ளது.

வெளிப்பகுதியில் இருந்து பார்க்கும் போது கேன் உள்ளேயிருக்கும் தண்ணீர் தெளிவாகத் தெரிய வேண்டும். மங்கலாக இருந்தால் கேன்கள் பழையதாக இருக்கும்.

அவற்றை விநியோகம் செய்யும் குடிநீர் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.