இளைஞர்கள் மத்தியில் தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? எப்படி தடுப்பது?

குழந்தைகளாக இருக்கும் போதே, அவர்களின் ஆளுமைப்பண்பில் உள்ள மாற்றங்களை கவனிக்க வேண்டும். உளவியல் ரீதியான பிரச்னைக்கு தீர்வு, நபருக்கு நபர் மாறுபடும்.

மனச்சோர்வு காரணமாக ஏற்படுகிறதா அல்லது அவர்களின் பரம்பரையில் யாருக்கேனும் இந்த பாதிப்பு இருந்ததா, பெற்றோர் வளர்ப்பு முறை ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.

வளரும் சூழல், குணநலன், சமூக அமைப்பு, முந்தைய காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்கள் என பல விஷயங்களை ஆய்வு செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

பல பெற்றோர், குழந்தைகள் அடம்பிடித்தால் உடனே செய்து தருகின்றனர்.

இப்படி பழக்குவதால், ஒரு கட்டத்தில் சக்திக்கு மீறியதை கேட்கும் போது, அதை செய்ய முடியாத சூழலில் தற்கொலை செய்வதாக பயமுறுத்துவதும் நடக்கிறது.

உளவியல் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

சிலர் முறையாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மருந்துகளை சரியாக கொடுப்பது அவசியம்.

அவர்களுக்கு ஏற்படும் அனைத்து மாற்றங்களையும், மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம். அதற்கேற்ப மருந்துகள் மாற்றி வழங்கும் போது, இப்பாதிப்பில் இருந்து எளிதில் மீட்க முடியும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)