தாய்ப்பால் கசிவு பிரச்னையா.. என்ன செய்யலாம்?

சிலருக்கு தாய்ப்பால் கசிவு இருக்கும். இவர்கள், 'பிரஸ்ட் பேட்' பயன் படுத்தலாம். முழுமையாக நனைந்து விட்டால், வேறு பேட் மாற்றிக் கொள்ளலாம்.

இதை பெரும் பாலும் யாரும் பின்பற்றுவதில்லை. ஈரமாகவே இருந்தால், தொற்றுகள் ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

சிலருக்கு ஒரு பக்க மார்பில், காம்பு உள்ளேயே இருக்கும். கர்ப்ப காலத்திலேயே இதை கவனித்து, டாக்டரின் ஆலோசனையுடன் 'நிப்பிள் ஷீல்டு' அணியலாம்.

மார்பு காம்புகளில் வெடிப்பு மற்றும் தொற்று ஏற்பட்டால் வலி இருக்கும்; தாய்ப்பால் தர முடியாது; பால் கட்டிக் கொள்ளும்.

அப்படியே விட்டால், இதனாலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சீழ் உருவாகும்; தீவிர வலி, காய்ச்சலுடன் சிரமப்படுவர்.

இப்பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக மகபேறு மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

கவனிக்காமல் விட்டுவிட்டால் ஒரு சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை வாயிலாக இதை வெளியேற்ற வேண்டியிருக்கும்.