இரவில் சரியாக துாங்க முடியல்லையா? என்ன செய்யலாம்?

கம்ப்யூட்டர், டிவி., அலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துவது துாக்கம் வராமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

நன்றாக துாங்க வேண்டுமானால் வாரத்தில் ஒரு நாளில் உடலில் எண்ணெய் தேய்த்து அரைமணி நேரம் வெயில் படும்படி இருக்க வேண்டும்.

மேலும் விட்டமின் 'டி' பெற வாழை இலை குளியல் எடுத்தால் நன்றாக துாக்கம் வரும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஒரு டம்பளர் தண்ணீர் குடித்து விட்டு லேசான ஆடை அணிந்து உடலை நனைத்து வீட்டின் மாடியில் வாழை இலையில் படுத்துவிட வேண்டும்.

இரு வாழை இலையை உடலில் கட்டி விட வேண்டும். ஒரு மணி நேரம் வரை வெயிலில் இருக்க வேண்டும்.

வாழையின் குளிர்ச்சியில் வெப்பம் தெரியாது. இவ்வாறு செய்தால் அன்று இரவு அடித்துப் போட்ட மாதிரி துாக்கம் வரும்.

தினமும் குளிர்ந்த தண்ணீரில் இருவேளை குளிக்க வேண்டும்.

உணவில் கண்டிப்பாக உப்பு தேவையான அளவு சேர்க்க வேண்டும். மோர், எலுமிச்சை பானங்களில் உப்பு சேர்க்க வேண்டும்.