ஒல்லியான பெண்கள் உடல் எடையை அதிகரிக்க சில டிப்ஸ்....

நீங்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட கூடுதலாக 500-1000 கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், தினசரி 500 கலோரி ஆற்றல் அளிக்கும் உணவுகளை கூடுதலாக சாப்பிட்டாலே ஒரு வாரத்துக்கு ஒரு பவுண்ட் எடையை அதிகரிக்கலாம்.

5 மணிநேர இடைவெளியில் 3 வேளை உணவு உட்கொள்ளுங்கள். இத்துடன் உணவு இடைவேளைக்கு நடுவே 2 அல்லது 3 முறை நொறுக்கு தீனிகள் சாப்பிடலாம்.

புதிய தசைகளை கட்டுமானம் செய்ய உடலுக்கு ஒரு நாளைக்கு 0.8 கிராம் அளவுக்கு புரதச்சத்து தேவை. எனவே, முட்டை, இறைச்சி, மீன், பால், விதைகள், புரோட்டின் சப்ளிமென்ட் உள்ளிட்ட புரதங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

நொறுவை உணவுகள் என்பது பால், மில்க் ஷேக் போன்ற பானங்கள் மற்றும் ஆப்பிள், நெட், வாழைப்பழம், மாவுச்சத்து நிறைந்த பழம் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளை குறிக்கும். இவற்றை உணவு இடைவேளைக்கு நடுவில் சாப்பிடுவது சிறந்தது.

வாரத்துக்கு 2 முதல் 4 முறையாவது அதிக எடைகளை தூக்கி பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் எடையை அதிகரிப்பதுடன், சதைகளையும் வலுவாக்கும்.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்துவது பசியை குறைக்கும் என்பதால் அதை தவிர்க்கவும். உணவுக்கு முன் தண்ணீர் குடிக்கும் போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட தொடங்குவதால் கொஞ்சமாகதான் சாப்பிட முடியும்.