துவக்க நிலை நீரிழிவு பாதிப்புக்கு நடைப்பயிற்சி தீர்வு தருமா?
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
குறைந்தபட்சமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். மன அழுத்தமின்றி இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீரிழிவு பாதிப்பு துவக்க நிலையில் இருந்தால், நடைப்பயிற்சியுடன் டாக்டரின் பரிந்துரைப்படி மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
நீரிழிவு பாதிப்பை குறைக்க நடைப்பயிற்சி மட்டுமின்றி, காய்கறிகள், கீரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அசைவம், பொரித்த மற்றும் துரித உணவுகளை தவிர்த்து, மது, சிகரெட், புகையிலைக்கு 'குட் பை' சொன்னால் எளிதாக தப்பிக்க முடியும்.