தினமும் முருங்கைக்கீரை பொடியை சாப்பிடலாமா?

முருங்கைக்கீரையில் இரும்பு, நார்ச்சத்து, வைட்டமின் பி, பீட்டா கரோட்டின், மெக்னீசியம் மற்றும் கால்சியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இதன் ஆரோக்கிய பலன்கள் காரணமாக கீரையாக சமைக்காவிட்டாலும் பொடியாக வாங்கி பலரும் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக முருங்கைக்கீரை பொடியை தினமும் சாப்பிடவும் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தினமும் முருங்கைக்கீரை அல்லது அதன் பொடியை சாப்பிடும்போது, அதிலுள்ள இரும்புச்சத்து நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கும்.

இப்படியே தொடரும்போது, குறிப்பிட்ட இடைவெளியில் நம் உடம்பில் அதிகப்படியான இரும்புச்சத்து சேர துவங்கிவிடும்.

இதனால், செரிமான மண்டலத்தில் தொந்தரவு ஏற்படக்கூடும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளது.

எனவே, முருங்கைக்கீரை அல்லது முருங்கைக்கீரைப் பொடியை வாரத்துக்கு 2 நாட்கள் வீதம் சாப்பிட்டாலே போதுமானது என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாகும்.

மற்ற கீரைகளையும் இதேபோன்று குறிப்பிட்ட அளவு உட்கொள்வது தான் ஆரோக்கியமானது.