முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? வேண்டாமா?

புரதச்சத்து மிக்க முட்டையை தினமும் ஒன்றாவது சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதனால் சிலர் அதிக அளவில் முட்டைகளை வாங்குவதுண்டு.

வாங்கிய முட்டையை அப்படியே பிரிட்ஜில் வைக்கப்படும் போது, அதிக குளிர் காரணமாக அவற்றின் சுவை மாறிவிடும் என கூறப்படுகிறது.

பிரிட்ஜில் வைத்த முட்டையை, பிறகு பயன்படுத்தும் போது அறைவெப்ப நிலை வேறுபாட்டினால் பாக்டீரியா வருமாம். சில சமயம் இது முட்டையின் உள்ளே சென்றுவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

குறிப்பாக சால்மோனெல்லா என்பது முட்டையில் காணப்படும் உடல் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா. இது இருக்கும் முட்டையை உணவாக்கும் போது வயிறு தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும்.

நாம் வாங்கும் போது முட்டையின் மேல் அழுக்கு, கோழி இறகு, எச்சம் அதில் ஒட்டி இருந்தால் கண்டிப்பாக அதை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது.

அழுக்காக இருக்கும் முட்டையை வாங்கியவுடன் வெளிப்புறத்தை வெந்நீரில் கழுவி அறைவெப்பநிலையில் வைத்து 4 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

சில முட்டைகள் குளிரூட்டப்பட்ட பிறகே விற்கப்படுகிறது. இவற்றை பிரிட்ஜுக்கு வெளியே நீண்ட நேரம் வைத்திருப்பது பாக்டீரியா வரும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

இப்படியான முட்டைகளை பிரிட்ஜில் சேமித்து வைப்பதே அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சரியான வழி என கூறப்படுகிறது. பிரிட்ஜில் முட்டையை வைத்தாலும் 7 நாட்களுக்குள் அதை பயன்படுத்திவிடுவது மிகவும் நல்லது.