கேன்ஸ் 2023... முதன் முறையாக சாரா அலிகான்
ஆண்டுதோறும் நடக்கும் உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று, சிவப்பு கம்பளத்தில் நடப்பது நட்சத்திரங்களின் தீரா கனவாகும்.
இந்தாண்டு 76வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடக்கிறது. முதல் நாள் துவக்க விழாவில் சாரா அலிகான் உட்பட பலர் பங்கேற்று சிவப்பு கம்பளத்தில் ஸ்டைலாக நடை போட்டனர்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாரா அலிகான்.
கேன்ஸ் 2023 திரைப்பட விழாவில் இவர் பழுப்பு நிற லெஹங்காவை அணிந்தவாறு சிவப்பு கம்பளத்தின் மீது உற்சாகமாக நடைபோட்டார்.
அபு ஜானி, சந்தீப் கோஷ்லா வடிவமைத்த இந்த லெஹங்கா, கிரிஸ்டல், முத்துக்களுடன் நுணுக்கமான மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கைவினை கலைஞர்களின் திறனை காட்டுகிறது.
கேன்ஸ் விழாவில் பங்கேற்பது சாரா அலிகானுக்கு இது முதல் முறையாகும்.
ஹிந்தியில் தனுஷ் நடித்த 'அட்ரங்கி ரே' படத்தில் சாரா அலிகான் ஹீரோயினாக நடித்தது குறிப்பிடத்தக்கது.