கார் ஓட்டுவாங்களா ..கேம் விளையாடுவாங்களா? பிளே ஸ்டேஷன் பொருத்தப்பட்ட கார்!

பலரும் எதிர்பார்த்த பிளே ஸ்டேஷன் பொருத்தப்பட்ட காரை சோனி மற்றும் ஹோண்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

அமெரிக்காவில் சோனி மற்றும் ஹோண்டா நிறுவனம் இணைந்து, 'சோனி ஹோண்டா மொபிலிட்டி' என்ற நிறுவனத்தை உருவாக்கி கார்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த காருக்குள்ளேயே சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கார் விற்பனைக்கும் வரும்பட்சத்தில் கேமர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிறுவனம் 2023 ஜனவரி 4ம் தேதி, அமெரிக்காவில் நடக்கவுள்ள கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தவுள்ளது.

ப்ளே ஸ்டேஷன் 5 மட்டுமல்லாது, லெவல் 3 ஆட்டோனமஸ் அம்சங்களுடன் இந்த கார் வரவிருக்கிறது.

இன்று மார்கெட்டில் பெரும்பாலும் லெவல் 2 அட்டோனமஸ் கார்களே விற்பனையாகி வரும் நிலையில், இந்த கார் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

2025ம் ஆண்டு முடிவு அல்லது 2026ம் ஆண்டு, இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.