நீர்க்கடுப்பு உருவாக காரணமும், தீர்வுகளும்...
நீர்க்கடுப்பு என்பது சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் உருவாகும்.
சிறுநீர் வெளியேற்றக் குழாயும் சிறுநீர்ப்பையும் தொற்று கண்டால் அது கீழ் சிறுநீர்ப்பாதை தொற்று என அழைக்கப்படுகிறது.
சிறுநீர்க் குழாய், சிறுநீரகங்களில் தொற்று ஏற்பட்டால் மேல் சிறுநீர்ப்பாதை தொற்று எனப்படும்.
கீழ் சிறுநீர்ப்பாதையில் தொடங்கும் தொற்றை கவனிக்காமல் விட்டால் அது மேலேறி சிறுநீரகங்கள் வரை செல்லும்.
நமது உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
தண்ணீர் குடிப்பது குறைந்தால் சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து கிருமித்தொற்று ஏற்படும்.
சிறுநீர் கழிக்கும் போது லேசான வலி, எரிச்சல் தோன்றுவது, சிறுநீர் கழித்து முடிக்கும் தருவாயில் அடிவயிற்றில் கனமாக கவ்வுவது போன்ற வலி ஏற்படுவதை நீர்க்கடுப்பு என்கிறோம்.
உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க தண்ணீர், இளநீர், பழச்சாறு, எலுமிச்சை சாறு அருந்தினால் சரியாகும்.
பெண்களின் சிறுநீர்ப்பாதை வெளியே சென்று முடியும் இடத்தின் அருகிலேயே இனப்பெருக்க உறுப்பான யோனியும் முடியும். அதற்கு அருகில் ஆசன வாயும் உள்ளது.
பெண்களின் சிறுநீர்ப்பாதை வெளியேற்றக் குழாயின் நீளம் சிறிதாக இருப்பதால் ஆண்களை விட சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என டாக்டர்கள் கூறுகின்றனர்.