ஃபோலிக் அமிலத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃபோலிக் அமில மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பர்.
அதென்ன ஃபோலிக் அமிலம்? எதற்காக இதற்கு இவ்வளவு முக்கியத்துவம், உடலுக்கு இதனால் என்ன பயன் என்பது பற்றிய விவரங்களைப் பார்க்கலாமா?
ஃபோலிக் அமிலம் உடலுக்கு வைட்டமின் பி9-ஐ அளிக்கிறது.
தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமினான இது உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அதிகரித்து டிஎன்ஏ, ஆர்என்ஏ மரபணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலுக்குத் தேவையான சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய இது உதவும்.
எனவே தான் கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் நிறைந்த பழங்கள், உணவுகளை சாப்பிட மகப்பேறு டாக்டர்கள் வலியுறுத்துவர்.
நிலக்கடலை, முழு தானியங்கள், முட்டை, மாமிசம், பேரிச்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களில் இது இயற்கையாகவே இருந்தாலும், குறைந்த காலத்தில் அதிக சத்து பெற மாத்திரைகள் உதவுகின்றன.
இந்த அமிலம் உடலில் அளவுக்கதிகமாக இருந்தாலும் பிரச்னைதான். எனவே கர்ப்ப காலத்தில் இதனை கட்டுக்குள் வைத்திருக்க மாத்திரைகள் குறிப்பிட்ட அளவிலேயே டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மதுப்பழக்கம் ஃபோலிக் ஆசிட் உருவாக்கத்தை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால், கட்டாயம் மதுவை தவிர்க்க வேண்டும்.