இதயத்தை கண்காணிக்கும் மொபைல் மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்கள்!

இதயத்தை கண்காணிக்கும் தொழில்நுட்பங்களில் மொபைல் மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்கள் நவீன அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதயத் துடிப்பை தொடர்ந்து கண்காணித்து, நோயாளிக்கு ஏற்றவாறு இதயத் துடிப்பின் வேகத்தை மாற்றக்கூடிய திறன் கொண்டது.

மொபைல் போன்களை கொண்டு ஒயர்லெஸ் தொழில்நுட்பங்களின் வழியாக பேஸ்மேக்கர்கள், ஐ.சி.டி.,களிலிருந்து இதய துடிப்பு, பேட்டரி ஆயுள், சாதனத்தின் செயல்திறன் ஆகிய தகவல்களை பெறலாம்.

நோயாளிகளின் சீரற்ற இதயத்துடிப்பு, சாதனத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் மொபைல் செயலி எச்சரிக்கும்.

பேஸ்மேக்கர் மற்றும் ஐ.சி.டி.,களில் இருந்து நோயாளி குறித்த தரவுகளை, 'கிளவுட் ஸ்டோரேஜ்'ஜில் பாதுகாப்பாக சேமிக்க முடியும்; தொடர்ந்து கண்காணிக்க இது உதவும்.

இதயத் துடிப்பின் போக்குகளை கண்டறிவது உள்ளிட்டசெயல்பாடுகளை கிளவுட் கம்ப்யூட்டிங் செயல்படுத்துகிறது.

டாக்டர்கள் இதை எந்த இடத்திலிருந்தும் காண முடியும். இதனால், இருந்த இடத்தில் இருந்தே மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் எளிதாகின்றன.