குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் வருவதை தவிர்ப்பது எப்படி?

புகை பிடிப்பவர்கள், சளி, இருமல், காச நோய் உள்ளோர் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை தூக்கி முத்தம் கொடுப்பதன் மூலம் பாதிப்பு பரவுகிறது.

இதனை தடுக்க குழந்தைகள் அருகே இருமல், தும்மலை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

கைகளை நன்கு கழுவிய பின்பு குழந்தைகளை துாக்க வேண்டும்.

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சளி, மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் ஏற்பட்டால் டாக்டர் அறிவுரைப்படி 2 நாட்களுக்கு மருந்து தரலாம்.

இருமல், இளைப்பு, மூச்சு விடுதலில் சிரமம், பால் குடிக்காமல் இருப்பது, சுணக்கம் ஏற்பட்டால் டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

குழந்தை பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய ப்ளூ ஊசி, நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு துாதுவளை, மிளகு, இஞ்சி சாறு சிறிதளவு கொடுப்பதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இருமல், காய்ச்சல் வருவதை கட்டுப்படுத்தலாம்.