அன்னப் பிளவு காரணமும் சிகிச்சை முறையும்…

அன்னப் பிளவு என்பது பிறந்த குழந்தையின் முகம், மேல் உதட்டில் துவங்கி, மேல் தாடையின் உள்பக்க அன்னம் முழுதும் கத்தியால் பிளந்தது போல இருக்கும்.

உதட்டுப் பிளவை, தோற்றம் சார்ந்த அழகியல் பிரச்னை. அன்ன பிளவை, செயல்பாடு சம்பந்தப்பட்டது.

உதட்டில் -ஆரம்பித்து தொண்டை வரையிலும் முகத்தையே இரண்டாக வெட்டியது போன்று இருக்கும். வாய் வழியாக பார்த்தால் மூக்கு தெரியும்.

இப்பிரச்னைக்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம், கர்ப்பத்தின் போது, தாய்க்கு இரும்புச் சத்து குறைபாடு இருப்பது தான் என கூறப்படுகிறது.

குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் போதே இரும்புச் சத்து குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்து, சரி செய்த பின் கர்ப்பம் தரிக்க வேண்டும்.

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வதால் வரும் பல பிறவி கோளாறுகளில் பிரதானமானது அன்ன, உதடு பிளவு. கர்ப்பிணிக்கு மது, சிகரெட் பழக்கம் இருந்தாலும் இப்பிரச்னை குழந்தைக்கு வரலாம்.

பிறந்தது முதல் 22 வயது வரை, தொடர்ந்து அந்தந்த வயதிற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும். இத்துடன் சேர்த்து பேச்சுப் பயிற்சி தருவதும் முக்கியம்.