தேங்காய் பாலில் ஹெல்த்தி ஹேர் பேக்!

தலைமுறை, தலைமுறையாக இந்திய பெண்களின் சருமம், கூந்தல் பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் முக்கிய பங்கு வகித்துள்ளது என்றே கூறலாம்.

அதிலும் தேங்காய் பாலில் துத்தநாகம், கொழுப்பு, புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் பி12, சி மற்றும் ஈ போன்ற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த சத்துகள் உங்கள் கூந்தலை வேரிலிருந்து உறுதியாக்கும்.

தேங்காய் பால், எண்ணெய் பிசுக்கு இல்லாமலேயே கூந்தலை மென்மையாக, பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

தேங்காய் பாலை இரவு முழுவதும் பிரிட்ஜில் வைத்து கெட்டியாக்கவும். அதை தலையில் தடவி குளிக்கவும்.

இப்படி செய்வதால் நுனி முடிக்கால்களில் காண்ப்படும் பிளவுகள் விரைவில் மறையும்.

எண்ணெய் பசை நிறைந்த கூந்தல் உடையவர்கள் தேங்காய் பால் மற்றும் கடலை மாவு ஹேர் பேக்கை தேர்வு செய்யலாம்.

கடலை மாவு தலையில் உள்ள அழுக்கு மற்றும், எண்ணெய் பசையை நீக்கும். கூந்தல் உறுதியாகும். வாரம் ஒருமுறை இப்படி செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.