வறட்டு இருமல் வருவது எதனால்? எவ்வாறு சரி செய்யலாம்?

வறட்டு இருமல் ஒரு அறிகுறி. இது தனிப்பட்ட நோய் அல்ல.

ஒவ்வாமை, உணவு மற்றும் காற்று மாசு, சைனஸ் எனப்படும் மூக்கு சம்பந்தப்பட்ட பிரச்னை, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று, மருந்துகளின் பக்க விளைவு காரணமாக ஏற்படும்.

பொதுவாக வறட்டு இருமல் அதிகமாக இருந்தால் அவை எதனால் வருகிறது என்று தெரிந்துகொள்ள டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிய வேண்டும். நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெந்நீரில் உப்பு சேர்த்து கொப்பளிக்கலாம்.

அதிக காரம், புளிப்பு, அதிக உணவு உண்ணக்கூடாது. சாப்பிட்டவுடனேயே துாங்கக் கூடாது.