அல்சர் வர காரணமும் வகைகளும்... தவிர்க்க வேண்டியவை என்னென்ன?

வயிற்றுப் புண் எனப்படும், 'அல்சர்' வர பல காரணங்கள் உண்டு. கெட்டுப் போன அல்லது புளித்த உணவை சாப்பிடுவதால், 'எச் - பைலோரை' என்ற பாக்டீரியா தொற்றே அல்சர் வர முக்கிய காரணம்.

கார்பனேடட் பானங்கள், குறிப்பிட்ட உடல் பிரச்னைகளுக்கு, நீண்ட நாட்களாக எடுத்துக் கொள்ளும் மருந்து அல்லது வலி நிவாரணி மாத்திரைகள், அல்சரை உண்டாக்கலாம்.

வயிறு ஆரம்பிக்கும் இடத்தில் வரும், 'பெப்டிக் அல்சர்' பொதுவானது. 'மியூக்கஸ்' எனப்படும் சவ்வில், அரிப்பு ஏற்படுவதால் இது வருகிறது.

சாப்பிடும் உணவு, அமிலத்துடன் சேர்ந்து, மேல் நோக்கி வந்து, அரிப்பை ஏற்படுத்தும்; இதனால், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற பிரச்னைகள் வரும்.

இது தவிர வாழ்க்கை முறை மாற்றம், ஜங் உணவுகள், புகை மது பழக்கம், வேலை பழு, ஸ்ட்ரெஸ் உள்ளிட்ட காரணங்களாலும் இது வரும்.

அல்சர் பிரச்னை உள்ளவர்கள் பால் பொருட்களை அதிகம் சாப்பிடக் கூடாது; காபி, டீ குடிக்க கூடாது; வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பொரிக்க, வறுக்க பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, சமைத்த உணவை சூடுபடுத்தி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

மேலும் பிரிஜ்ஜில் சமைத்த உணவை வைத்து, பல நாட்கள் பயன்படுத்துவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சமைக்காத வெங்காயம், பூண்டு, முட்டை கோஸ், புரோக்கோலி போன்ற, சல்பர் அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடக் கூடாது; அமில சுரப்பை இவை அதிகப்படுத்தும்.