புனேவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்: அறிகுறிகள் அறிவோமா!
டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே, ஜிகா வைரஸ் பரவுகிறது.
ஜிகா வைரஸ் தொற்று அறிகுறிகளாக லேசான காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி, உடம்பில் தடிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
மற்ற மாநிலங்களை காட்டிலும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இந்த பாதிப்பு தற்போது அதிகம் தென்படுகிறது.
புனேவில், 26 கர்ப்பிணிகள் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக கர்ப்பிணி ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டால், அவரது கருவில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
மேலும் ஜிகா வைரஸ் தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
ஜிகா வைரஸ் நோய்க்கு குறிப்பிட்ட மருந்து அல்லது தடுப்பூசி கிடையாது. இதற்கு சிகிச்சையானது ஜிகா அறிகுறிகளை பொறுத்து அதற்கான மருந்துகள் வழங்கப்படுகிறது.