குழந்தை பிறந்த பின் ஏற்படும் மனச்சோர்வு கவலைக்குரியதா?
குழந்தை பிறப்பிற்கு பின் பல தாய்மார்களுக்கு ஏற்படும் லேசான மனச்சோர்வு, அழுகை, எரிச்சல், துாக்கமின்மை போன்றவை தானாக சீராகி விடும்.
ஆனால் ஆழ்ந்த சோகம், பதட்டம், ஆர்வக் குறைவு, குழந்தை பராமரிப்பில் சிரமம், குற்ற உணர்வு, நம்பிக்கை இழப்பு, துாக்கமின்மை போன்றவை ஏற்படும்.
மேலும், ஒருசில நேரங்களில் தற்கொலை எண்ணங்களும் தோன்றும். இவை அனைத்தும் மன அழுத்தத்தின் காரணமாக உண்டாகக்கூடும்.
தொடர்ந்து இவை நீடித்தால் கட்டாயமாக மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
அதேபோல் குழப்பம், பயம், சந்தேகம், தன்னை அல்லது குழந்தைக்கு தீங்கு செய்யும் எண்ணங்கள் இருந்தாலும் உடனடியாக மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
அவரிடம் சரியான ஆலோசனை பெற வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் தேவையான சிகிச்சை அளித்தால் அவர்களை குணப்படுத்தலாம்.