குழந்தைகளின் பாதுகாப்பிற்கு செர்வேரிக்ஸ் தடுப்பூசி!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் நம் நாட்டில் 2வது இடத்திலுள்ளது.

பெண்களின் புற்றுநோய் இறப்புகளுக்கு 2வது முக்கிய காரணமாகும். 'ஹெச்பிவி, பேப்ஸ்மியர்' சோதனை வாயிலாக துவக்கத்திலேயே இதை கண்டறிந்து தடுக்கலாம்.

ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் ஹெச்பிவி தொற்று இதற்கு காரணம். தொற்று பாதித்த 20 ஆண்டுகள் கழித்தே புற்று நோய் பாதிப்பு வரும்.

புகையிலை துணை தயாரிப்புகள், கர்ப்பப்பை வாய் செல்களின் மரபணுவை சிதைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தொற்றை தவிர்க்க பாதுகாப்பான உடலுறவு அவசியம்.

பிறப்புறுப்பில் வெள்ளை படுதல், அதன் நிறம், தன்மையில் வேறுபாடு இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஹெச்பிவி தடுப்பூசி இப்போது கிடைக்கிறது.

கார்டாசில், 6, 11, 16, 18 போன்ற ஹெச்பிவி வைரஸ் வகை பாதிப்பிற்கு எதிராக பாதுகாப்பு தரும். இது தவிர, செர்வேரிக்ஸ் என்ற தடுப்பூசியும் உள்ளது.

9 -14 வயதிற்குள் தடுப்பூசி போடுவது ஹெச்பிவி வைரசில் இருந்து பாதுகாப்பு தரும். நம் நாட்டில், 9 - 14 வயதினருக்கு 2 டோஸ்கள், 15 - 45 வயதினருக்கு 3 டோஸ்கள் போட வேண்டும்.

அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக இத்தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.