கடலைப்பருப்பு கேசரி இதுதான் !

பொதுவாக ரவையில், கேசரி செய்வது வழக்கம். கடலைப்பருப்பிலும் கூட, சுவையான கேசரி தயாரிக்கலாம். அதை எப்படி செய்வது என பார்க்கலாமா...

தேவையானப் பொருட்கள்: கடலைப்பருப்பு - 1 கப், வெல்லம் - 1.5 கப், நெய், ஏலக்காய் தூள் - தேவையானளவு.

கடலைப்பருப்பை நன்றாக வேக வைத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடலைப்பருப்பு விழுதை போடவும்.

இதில் வெல்ல துறுவல் சேர்த்து, நன்றாக கிளறவும்.

கலவை சுருண்டு வரும் போது, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய் துாள், நெய் ஊற்றி கிளறவும்.

சூடாக பரிமாறினால் சுவை அள்ளும். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, அனைவருக்கும் விரும்பிச் சாப்பிடுவர்.