இமயமலையில் மாற்றங்கள்... அதிகரிக்கும் நில நடுக்க அபாயம்
இந்திய தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்) வெளியிட்டுள்ள இந்தியாவின் நில நடுக்கம் அபாயமுள்ள பகுதிகளின் புதிய வரைபடம் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில், இந்தியாவிலுள்ள 61 % நிலப்பரப்புகளில் மிதமான முதல் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
நில நடுக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும் மண்டலம் IV மற்றும் Vல் இருந்த இமயமலை, தற்போது மண்டலம் VIல் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒட்டுமொத்த இமயமலை பகுதிகளிலும் நில நடுக்கத்துக்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மொத்த இமயமலையும் ரொம்ப ஆபத்தானது என்ற பிரிவுக்குள் வந்துள்ளது.
பூமிக்கடியில் இந்திய தட்டு ஒவ்வொரு ஆண்டும் 5 செ.மீ., வரை மேல்நோக்கி நகர்கிறது. யூரேசியத் தட்டுடன் இடைவிடாமல் மோதுவதால் தான், இமயமலையை இன்னும் உயரமாக்குகிறது.
நகர்ப்புறங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், பிஐஎஸ் வெளியிட்டுள்ள இந்தப் புதிய வரைபடம் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது.
எனவே, இமயமலைக்கு அடிவாரத்தில் இருக்கும் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் போன்ற நகரங்களை இன்னும் கூடுதல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாலங்கள், வீடுகள் போன்றவை நில நடுக்கத்தை தாங்கும் மாதிரி அமைக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.