கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் ரெசிபி!
பெரிய பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். முட்டையில் லேசாக நுரை வரும் போது, பொடி சர்க்கரையை சேர்த்து, நல்ல கிரீம் பதத்தில் திரும்பவும் கிளறி விட வேண்டும்.
நன்றாக கிளறியவுடன், கலவையில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும். இப்போது தேவையான அளவு பாலும், எண்ணெயும் சேர்த்து கொள்ளுங்கள்.
நன்றாக கலந்த பின், மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, மெதுவாக கலக்க வேண்டும்.கேக் பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி, தனியாக வைத்து கொள்ளுங்கள்.
இதன் பின், 'ஓவனில்' 2 நிமிடம் வைக்கவும். லேசாக சூடான பின், அந்த கேக் டிராலியில், மாவு கலவையை ஊற்றி, 160 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில், ஓவனில் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
அரை மணி நேரத்துக்கு பின், குச்சியால் குத்தி பார்க்க வேண்டும். குச்சியில் மாவு ஒட்டாமல் வெளியே வந்தால், கேக் நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம்.
இல்லை என்றால், கூடுதலாக ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வேக வைக்கவும். அவ்வளவு தான், சுவையான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் ரெடி.