உணவு கமகமக்க எளிய சமையல் டிப்ஸ்...

துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு சமைத்தால் சீக்கிரம் வெந்து விடும். அது வேகும் போது ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்தால் சாம்பார் மணக்கும்.

உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து அரைத்தால், வடை மிருதுவாக இருக்கும்

ஜவ்வரிசி வடாம் செய்ய தண்ணீர் கொதிக்கும் போது, சீஸைத் துருவி போடுங்கள். வடாம் காய்ந்து பொரிக்கும் போது, நல்ல சுவையுடன் இருக்கும்.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்யும் போது ஒரு ஸ்பூன் கட்டித்தயிரை அதில் கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.

அரிசி கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.

ரவா கேசரி செய்யும் போது, முதலில் ரவையைச் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

இதில், கேசரி செய்தால், சுவை கூடுவதுடன், அதிகமான அளவும் கிடைக்கும்