உப்பு கொண்டு இதை எல்லாம் செய்யலாம்...
பண்டிகைக்கு செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், அவை சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, துண்டு துணியில், ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு, பட்சண பாத்திரத்தில் அடியில் போட்டு வைக்கவும்.
ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு கப் கல் உப்பு சேர்த்து, அதில் ஜீன்சை ஊற வைத்து பின் துவைத்தால், கலர் மாறாமல் அப்படியே நீடித்திருக்கும்.
புடவைகளுக்கு அடிக்கும் பால்ஸ்களை, முதலில் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, உலர வைத்து, பின் அயர்ன் செய்து தைத்தால், சாயமும் போகாது; ஓரமும் சுருங்காது.
சட்டைக் காலர்களில் அழுக்கு படிந்திருந்தால், சிறிது பொடி உப்பை, அழுக்கு உள்ள பகுதிகளில் பூசி, சிறிது நேரம் கழித்து, பிரஷ்ஷில் தேய்த்தால், அழுக்கு நீங்கி விடும்.
கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை, உப்பு கலந்த நீரில், சிறிது நேரம் போட்டு வைத்தால், ப்ரஷ்ஷாகி விடும்; நறுக்குவதும் எளிதாக இருக்கும்.
சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் நீர் போகாமல் அடைத்துக் கொண்டிருக்கிறந்தால் சிறிது கல் உப்பை, இரவில் போட்டு வையுங்கள். காலையில் நீர் அடைப்பு இருக்காது.