குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் கோவா போளி ரெசிபி!

தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், சர்க்கரை - ஒரு மேஜைக்கரண்டி, சர்க்கரை சேர்த்த கோவா - ஒரு கப், ஏலக்காய்த்துாள் - கால் தேக்கரண்டி

நெய் - தேவையான அளவு, மைதாமாவு - அரை கப், கோதுமைமாவு - கால் கப், கார்ன்ப்ளார் - கால் கப், உப்பு - கால் தேக்கரண்டி.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து, குறைந்த தீயில் கிளறவும்.

கெட்டியாக வரும் பக்குவத்தில் அதனுடன் கோவா, ஏலக்காய்த்துாள் சேர்க்கவும். கடைசியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.

மைதா மாவு, கோதுமை மாவு, கார்ன்ப்ளார் மூன்றையும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

இந்த மாவில் சிறிது எடுத்து அப்பளம் போல் இட்டு, அதில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, போளியாக தட்டி இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். போளி ரெடி...