தொடர்ந்து நைட் டூட்டி நல்லது இல்லை தான்.... ஆனால், லைப் ஸ்டைலில் இருக்குது தீர்வு!

ஐ.டி.துறையில் நைட் டூட்டி இன்று பலரது வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறது. இதனால் பல வகையில் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

தொடர்ந்து கம்ப்யூட்டர் திரையை உற்று நோக்குவதால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, ஒற்றைத் தலைவலி மற்றும் நரம்பியல் குறைபாடுகள் வரலாம்.

வெயில் படாமல் வாழ்வதால் ஏற்படும் வைட்டமின்- டி குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது.

எனவே, பகலில் தூங்கும்போது அறை முழு இருட்டாக இருக்க வேண்டும். லைட் தொந்தரவு கூடாது.

அறையின் உள்ளே அல்லது வெளியே தேவையில்லாத சத்தம் கேட்க கூடாது. அதை தடுக்க முடியாவிட்டால், காதுகளுக்கு ஒலி அடைப்பு பயன்படுத்தலாம்.

இரவுப் பணி பார்க்கும் போது அதிக காரம், எண்ணெய் உணவு தவிர்க்க வேண்டும். அடிக்கடி காபி குடிக்கக்கூடாது.

பகலில் வெயில் இருக்கும்போது குறைந்தது கால் மணி நேரமாவது உடலில் வெயில் படும் விதமாக நடக்கலாம்; அல்லது அமர்ந்து இருக்கலாம்.

இளம் வெயிலில் உடற்பயிற்சி செய்யலாம்.

இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் இரவுப்பணியால் உண்டாகும் உடல் பாதிப்புகளை குறைக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.