குழந்தைப் போன்ற மிருதுவான சருமம் பெற செலவில்லாத டிப்ஸ்.

குழந்தைப் பருவம் வரை போஷாக்குடன் காணப்படும் நமது முகம், வளர வளர பராமரிப்பு மற்றும் கண்டுகொள்ளல் இன்றி வாடி, வதங்கி பொலிவற்றதாகிவிடுகிறது.

உங்களுடையது எண்ணெய் பசையற்ற சருமம் எனில் வாரத்திற்கு ஒரு முறையாவது எக்ஸ்போலியேட், அதாவது இறந்த செல்களை அகற்றுங்கள்.

குளிப்பதற்கு முன் உலர்வான உடம்பிலேயே பாடி பிரஷ்ஷை பயன்படுத்தி தேய்த்துவிட்டு, பின்னர் குளிக்கலாம்.

செயற்கை நார்களுக்கு பதில், இயற்கை இழை கொண்ட பாடி பிரஷ்கள் சிறந்தவை. ஆனால் அவை சில ஆயிரங்கள் ஆகும்.

உடலின் மற்ற பகுதிகளைப் போலவே சருமமும் மாற்றமடையும் முன்பு பயன்படுத்திய மாய்ஸ்சரைசர் தற்போது பயன் தராமல் போகலாம். அதற்கு ஏற்ப தயாரிப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைக் குடியுங்கள். அது சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும்.

சன் ஸ்க்ரீன், லோஷன், கையுறை, ஸ்டோல் போன்றவற்றை பயன்படுத்தி மாசுப்படாமல் சருமத்தை காக்கலாம்.