கிச்சன் மணக்க எளிய குக்கிங் டிப்ஸ்...

எந்த வகைப் புளிக்குழம்பு தயாரிக்கும் போதும், கடுகுடன் சிறிது சோம்பையும் சேர்த்துத் தாளித்தால் வாசனையுடன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் 'வெஜிடேபிள் சாலட்' செய்யும்போது சில நேரம் அதிகமாக நீர் விடும். அந்த சமயத்தில் சில, 'பிரெட்' துண்டுகளை அதில் சேர்த்தா 'சாலட்'டின் சுவையும் கூடும்.

சூடாக வடித்த அரிசி கஞ்சியில் பனங்கற்கண்டு போட்டு குடித்து வர, வறட்டு இருமல் நீங்கும்.

பழைய சாதத்தை நன்கு பிசைந்து, கடலை மாவு, சோள மாவு, இஞ்சி -பூண்டு விழுது, மிளகாய் துாள் சேர்த்து , விரும்பிய வடிவில் எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் பக்கோடா தயார்.

குழந்தை பெற்ற பெண்கள், வாரம் ஒரு முறை பூங்கார் அரிசியை சமைத்து சாப்பிட்டால், தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

எலுமிச்சை பழத்தின் மீது எண்ணெய் தடவி, அவற்றை குளிர்சாதன பெட்டிக்குள் வைத்தால், ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.

தக்காளியிலிருந்து சாறு வெளியே வரும் வரை வதக்கினால், தக்காளி சாதம் சுவையாக இருக்கும்.

வெரைட்டி ரைஸ் செய்யும் போது, சாதம் சூடு ஆறிய பிறகே கலவையை கொட்டி கிளற வேண்டும்.

முழு தேங்காயை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.