குட்டீஸ்களை குஷிப்படுத்தும் மொறு மொறு கேரட் சிப்ஸ்
தேவையானப் பொருட்கள்: கேரட் - 4, மிளகாய் துாள், மிளகு துாள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன், சோள மாவு, கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு.
கேரட்டை நீள அல்லது வட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
நறுக்கிய கேரட்டுடன் மிளகு துாள், சீரகத்துாள், சிறிதளவு உப்பு, சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு போன்றவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசைந்து, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிப்ஸ்க்காக பிசைந்து வைத்துள்ள கேரட் கலவையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுத்தால், சுவையான, மொறு மொறு கேரட் சிப்ஸ் ரெடி.
கேரட்டிலுள்ள முக்கியமான சுத்து 'வைட்டமின் ஏ. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மாலைக்கண் நோயை தடுக்கவும் உதவுகிறது.
'வைட்டமின் கே1' எலும்பு ஆரோக்கியம், ரத்த உறைதலுக்கு இன்றியமையாதது.
'வைட்டமின் பி6' உடலின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது. நார்சத்து உள்ளதால் செரிமானத்துக்கு நல்லது.