குட்டீஸ்களை அசத்தும் மொறுமொறு கேரட் 65 ரெசிபி

தேவையானப் பொருட்கள்: கேரட் - 100 கிராம், சோளமாவு, அரிசி மாவு, வறுத்த கடலை பருப்பு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் துாள் - சிறிதளவு, மிளகாய் துாள் -1 டேபிள் ஸ்பூன்.

எலுமிச்சை சாறு - ஒரு சிட்டிகை, நறுக்கிய வெங்காயம் - 1 கப், கறிவேப்பிலை - 2 கொத்து, சீரகம் -2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வத்தல் - 5, எண்ணெய், உப்பு - தேவையானளவு.

கேரட்டை தோல் சீவி, வட்டம் அல்லது நீள வாக்கில் நறுக்கவும்.

நறுக்கிய கேரட்டுடன் மஞ்சள் துாள், மிளகாய் துாள், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, மற்றும் அரிசி மாவு போன்றவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக கலக்கவும்.

பின், மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகாய் வத்தல் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கேரட்டை பொரித்தெடுக்கவும்.

பின், மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து பொரித்து வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து நன்கு கிளறினால், இப்போது சுவையான மொறுமொறுப்பான் கேரட் 65 ரெடி. குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவர்.