குட்டீஸ்களுக்கு பிடித்தமான கருப்பட்டி இட்லி!
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 2 கப், உளுந்துப்பருப்பு - 1/2 கப்,
கருப்பட்டி - 1 கப் (பொடித்தது), தேங்காய் துருவல் - 1/4 கப், நெய், ஏலக்காய் துாள், ஆப்பசோடா, உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.
புழுங்கல் அரிசி, உளுந்துப்பருப்பை தனித்தனியே ஊற வைத்து உப்பு சேர்த்து அரைத்து புளிக்க வைக்கவும்.
பின், தேங்காய் துருவல், நெய் மற்றும் ஏலக்காய் துாள் கலக்கவும்.
பொடித்த கருப்பட்டியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சி மாவுடன் சேர்க்கவும்.
இவற்றை கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்தால், சுவையான, 'கருப்பட்டி இட்லி' ரெடி.
இனிப்புச்சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவர். ஆப்பம், தோசை மற்றும் பணியாரமாகவும் செய்து குழந்தைகளை அசத்தலாம்.