குறையும் மக்கள் தொகை...!

தற்போது உலக மக்கள் தொகை 830 கோடியாக உள்ளது.

ஆனால் அடுத்த 40 ஆண்டுகளில் மக்கள் தொகை சரிவை சந்திக்கும் என இத்தாலியின் மிலன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இதன்படி, 2064ல் மக்கள் தொகை பாதியாக குறையும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர்.

வெப்பநிலை உயர்வு உள்ளிட்ட பருவநிலை மாற்றம், கொரோனா உள்ளிட்ட தொற்றுநோய், பெரிய நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்கள் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், உணவு, தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் இயற்கை வளங்கள் தட்டுப்பாடு ஆகியவையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயமென ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.