சுவையான வாழைப்பழ அல்வா ரெசிபி...

தேவையான பொருட்கள்:பழுத்த வாழைப்பழம் - 4, நெய் - 4 டீஸ்பூன், சர்க்கரை - 1/2 கப், முந்திரி, திராட்சை -தேவையான அளவு

செய்முறை; தோலுரித்த வாழைப்பழங்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் அரைத்து வைத்துள்ள வாழைப்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் நன்றாகக் கிளறி வதக்கவும்.

ஐந்து நிமிடங்களுக்கு பின், அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கைவிடாமல் கிளறவும்.

இடைஇடையே சிறிது சிறிதாக நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்.

அல்வா பதம் வந்ததும், வறுத்து வைத்த முந்திரி, திராட்சைகளை போடவும். அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ அல்வா தயார்!