ஆவாரம் பூ சூப் ரெசிபி

தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ - 1 கப், தக்காளி - 2, வெங்காயம் - 100 கிராம்,

பாசி பருப்பு, மஞ்சள் துாள், புதினா, எலுமிச்சை சாறு - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு, மிளகு துாள், சீரக துாள், தண்ணீர் - தேவையான அளவு.

நல்லெண்ணெய் காய்ந்தவுடன், நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கவும்.

பின், சுத்தம் செய்த ஆவாரம் பூவை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

அதில், வேக வைத்த பாசி பருப்பு, உப்பு, மிளகு துாள், மஞ்சள் துாள், சீரக துாள் சேர்த்து கொதிக்க விடவும்.

பின், நறுக்கிய புதினா, எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும்.

இப்போது சுவையான ஆவாரம் பூ சூப் ரெடி. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.