டேஸ்டியான உருளைக்கிழங்கு சீரக வறுவல்
தேவையானப் பொருட்கள்: வேக வைத்த உருளைக்கிழங்கு - 4, சீரகம் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மஞ்சள் துாள் - கால் டீஸ்பூன், மிளகாய் துாள் - அரை டீஸ்பூன்.
தனியா துாள் -1 டீஸ்பூன், அமெச்சூர் துாள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சீரகம் போடவும். அதன்பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி போடவும்.
மிதமான தீயில் வைத்து, மஞ்சள் துாள், மிளகாய் துாள், தனியா துாள் போட்டு கைவிடாமல் வதக்கவும்.
ஏற்கனவே வேக வைத்த உருளை கிழங்குகளை, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, மசாலாவில் போட்டு, உப்பு, அமெச்சூர் தூள் சேர்த்து வதக்கவும்.
இரண்டு, மூன்று நிமிடங்கள் வறுத்தால் உருளைக்கிழங்கு சீரக வறுவல் ரெடி.
ரசம், சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக்கொள்ள சுவை அள்ளும்.