டேஸ்டியான வாழைப்பூ பஜ்ஜி
தேவையானப் பொருட்கள்: சுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப், சோள மாவு, அரிசி மாவு - தலா 2 டேபிள் ஸ்பூன்.
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன், மிளகாய் துாள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் தேவையானளவு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், வாழைப் பூவை ஒவ்வொன்றாக பஜ்ஜி மாவில் புரட்டி எடுத்து, எண்ணெயில் போடவும்.
நன்றாக வேகவிட்டு பொரித்து எடுத்தால் இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ பஜ்ஜி ரெடி.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.