எக்ஸாம் ஸ்பெஷல்: மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் உணவுகள் சில...
நம் உடலில் உள்ள முக்கிய பாகங்களில், மற்ற உறுப்புகளை விட, மூளையே அதிக சக்தியை செலவழிக்கிறது.
மூளையை நீரோட்டமாக வைத்து இருக்க, இளநீர் அல்லது எலுமிச்சை சாறு பருகலாம். ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகள் மூளை செல்களை பாதுகாக்க உதவும்.
நெய்யை உங்கள் உணவில் தினசரி ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொள்வதால், செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மூளையின் செயற்பாட்டை சீராக்கவும் உதவும்.
மூளையின் ஆற்றலை அதிகரிக்க, வைட்டமின் பி நிறைந்த சிறு தானியங்கள், முழு கோதுமை, பால் உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளும்போது, உடல் விரைவில் கிரகிக்க வைட்டமின் சி உணவுகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நினைவாற்றலை அதிகரிக்கவும் துணை புரிகிறது.
தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு இரவு ஆழ்ந்த உறக்கம் அவசியம். எனவே, துாங்கும் முன் மஞ்சள் துாள் சேர்த்து பால் சாப்பிட, நல்ல துாக்கம் வரும்.
துளசி டீ, அஸ்வகந்தா பால், ராகி பால் வெல்லம் கலந்து சாப்பிட, மூளை அமைதி அடைந்து நல்ல துாக்கம் வரும். உடலில் இரும்பு சத்தும் அதிகரிக்கும்.