ஹெல்த்தியான பாகற்காய் பச்சடி ரெசிபி
தேவையான பொருட்கள்: பாகற்காய் - 2, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - 2 துண்டு, எள் - 2 டீஸ்பூன், மஞ்சள், கடுகு, உப்பு, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை, வெல்லம், எண்ணெய் - தேவையான அளவு.
பாகற்காயை, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன், பாகற்காயை போட்டு வேக வைக்கவும்.
பின், புளிக்கரைசல், மஞ்சள் துாள், வறுத்து பொடியாக்கிய எள் மற்றும் உப்பு போட்டு கொதிக்க விட்டு, ஒரு பின்ச் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
இப்போது, ஆரோக்கியமான மற்றும் சுவையான பாகற்காய் பச்சடி ரெடி. பகல் சாப்பாட்டுக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடலாம்.